ஜேர்மனியின் முக்கிய நகரில் அகதிகள் நுழைய தடை

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியின் Salzgitter நகருக்குள் அகதிகள் செல்ல அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது.

வடக்கு ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் அமைந்துள்ளது Salzgitter நகரம், இங்கு தோராயமாக 106,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் பல்வேறு நாட்டிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களும் அடக்கம். இந்நிலையில் Salzgitter நகரில் அகதிகள் இனி வாழ அரசு தடைவிதித்துள்ளது.

இது சம்மந்தமான ஆணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைப்பு காரணங்களுக்காகவும், அதிகளவிலான மக்கள் குடியேறுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற தடை உத்தரவானது Lower Saxony மாகாணத்தில் உள்ள வேறு இரண்டு நகருக்கும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த இரு நகரங்களும் அதிகளவிலான குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதை செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Lower Saxony மாகாணத்துக்கு இந்த வருடம் €10 மில்லியனை ஒருங்கிணைப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது.

ஆனால் அகதிகள் அதிகளவில் வருவதால் கூடுதலாக €10 மில்லியனை ஒதுக்கவும், அதை உள்ளூர் ஒருங்கிணைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகளவில் செலவிடவும் மாநில அரசு திட்டம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்