சுவிஸ் தம்பதியை தொடர்ந்து ஜேர்மன் சுற்றுலா பயணி மீது தாக்குதல்: மர்ம நபர்கள் அட்டூழியம்

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சொன்பத்ரா இரயில் நிலையத்தில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதாவும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்திரப்பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதால், அம்மாநில அரசு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்