ஜேர்மனியில் கொல்லைபுறத்தில் கிடந்த இரண்டாம் உலகப் போர் குண்டு? வந்து பார்த்த பொலிசாருக்கு ஏமாற்றம்

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனில் இரண்டாம் உலகப் போர் குண்டு இருப்பதாக கூறி, நபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் கடைசியில் அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Karlsruhe நகருக்கு அருகே உள்ள Bretten-ல் தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 81 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு தனது வீட்டின் கொல்லைப் புரத்தில் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடிக்காத நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால், அங்கு மக்கள் குவிந்துள்ளனர். அதன் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் இரண்டாம் உலகப்போர் குண்டை சோதனை செய்த போது, ஏமாற்றமடைந்தனர்.

ஏனெனில் அது குண்டு இல்லை, பெரிய சீமைசுரைக்காய். இது குறித்து பொலிசார் கூறுகையில், அது பார்ப்பதற்கு குண்டு போன்று தான் இருந்தது எனவும் 16 அடி கொண்ட அந்த காய் 5 கிலோ எடை கொண்டிருந்தது எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஜேர்மனியில் சமீபத்தில் Koblenz பகுதியில் கட்டுமானப் பணியின் போது, வெடிக்காத நிலையில் போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்