திருடுபோன 70,000 யூரோக்கள் மதிப்பிலான 20 டன் சொக்லேட்டுகள்

Report Print Kabilan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

மத்திய ஜேர்மனியில் சுமார் 20 டன் அளவிலான சொக்லேட்டுகள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் பழச்சாறுகள் நிறைந்த ஒரு லொறியும் காணாமல் போயுள்ளது. ஜேர்மனியின் Neustadt நகரில் உள்ள தொழிற்சாலையில் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்த Kinder Surprise என்னும் முட்டை வடிவிலான சொக்லேட்டுகள், டன் கணக்கில் காணமல் போனதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், அதிக அளவிலான சொக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

திருடுபோன சொக்லேட்டுகளின் மதிப்பு சுமார் 70,000 யூரோக்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. இவை அனைத்தும் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மதியம் வரையிலான காலத்திலேயே திருடப்பட்டுள்ளது.

இதே போல கடந்த வார இறுதியில் சுமைகள் ஏற்றப்படாத லொறி ஒன்றும் திருடப்பட்டுள்ளதால், சொக்லேட் திருட்டுக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்