ஐரோப்பிய நாடுகளிலேயே ஜேர்மன் மக்களின் ஆயுட்காலம் தான் குறைவு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
300Shares
300Shares
lankasrimarket.com

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் குறைவு என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

OECD (Organisation for Economic Co-operation and Development) என்ற அமைப்பு 28 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில், ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜேர்மனியில் ஆயுட்காலம் குறைவு என தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகள் 80.7 ஆண்டுகள் தான் உயிர்வாழ்வார்கள். இதுவே, ஸ்பெயின் நாட்டில் 83, இத்தாலி 82.7 மற்றும் பிரான்சில் 82.4 வருடங்கள் வரை வாழலாம் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் கார்டியோவாஸ்குலர் நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

அதிக உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் குடிப்பது ஆகியவையும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தொடர்ச்சியான பிரச்சினைகள் ஆகும்

2015 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் நோய்களின் பாதிப்பு 28 சதவிகிதமாக இருந்ததற்கு மக்களின் அன்றாடம் வாழ்க்கை சார்ந்த பிரச்சனைகளே காரணம். உணவு, புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் உழைப்பின்மை போன்றவை ஆகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்