கருக்கலைப்பு தொடர்பில் விளம்பரம் செய்த மருத்துவர்: நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் மருத்துவர் ஒருவர் தமது இணையதளத்தில் கருக்கலைப்பு தொடர்பில் விளம்பரம் செய்ததற்கு சட்டத்தை மீறியதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ஜேர்மனியின் Gießen பகுதியில் குடியிருக்கும் 61 வயதான Kristina Hänel என்ற மருத்துவருக்கே குற்றவியல் சட்டத்தை மீறியதாக கூறி 6000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் பேசிய அவர், இன்றைய அரசியல்வாதிகள் கருக்கலைப்பு குறித்து சாதாரணமாக பொதுவெளியில் பேசுவதை விரும்புவதில்லை.

மருத்துவர் Hänel தனது இணைய பக்கத்தில் கருக்கலைப்பு தொடர்பில் தகவலையே பகிர்ந்து கொண்டதாகவும், விளம்பரப்படுத்தவில்லை எனவும் நீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

இருப்பினும் ஜேர்மனியில் ஒருவரது பொருளாதார நன்மை கருதி கருக்கலைப்பு குறித்து விளம்பரம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் மருத்துவருக்கு 6000 யூரோ அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் மருத்துவர் Hänel தனது இணைய பக்கத்தில், தாம் வழங்கும் சேவைகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அதில் கருக்கலைப்பும் ஒரு பகுதியாக அமைந்திருந்தது.

மட்டுமின்றி கருக்கலைப்பு தொடர்பில் மருத்துவரை சந்திக்க வரும் நோயாளிகள் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன் அணுக வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்துள்ளார்.

இதுவே ஜேர்மன் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறிய செயல் என அரசு தரப்பு வாதிட்டுள்ளது.

ஆனாலும், தகவலுக்கும் விளம்பரத்துக்குமான வேறுபாடு அறியாமையே இந்த தீர்ப்புக்கு காரணம் எனவும் மருத்துவர் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்