உலகின் இரண்டாம் நாடாக திகழும் சிறப்பை பெற்ற ஜேர்மனி: எதில் தெரியுமா?

Report Print Raju Raju in ஜேர்மனி
672Shares
672Shares
lankasrimarket.com

உலகில் அதிகம் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர்கள் வாழும் நாடுகளில் ஜேர்மனி இரண்டாமிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே இது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகில், மருத்துவ முனைவர் பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2014 ஆண்டின் கணக்குபடி மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர்கள் வாழும் நாடுகளில் அமெரிக்கா 67,449 பேருடன் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

ஜேர்மனி 28,147 என்ற எண்ணிக்கையுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. பிரித்தானியா 25,020 என்ற அளவில் மூன்றாமிடத்திலும் இந்தியா 24,300 பேருடன் நான்காம் இடத்திலும் உள்ளன.

டாப் 15 நாடுகளின் பட்டியல்

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்