மதுபோதையில் காரை பாதசாரிகள் மீது ஏற்றிய நபர்: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஜேர்மனி
125Shares
125Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் போதையில் கார் ஓட்டிய நபர் ஏற்படுத்திய விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியின் கக்ஸ்ஹெவன் நகரில் உள்ள ஒரு இரவு விடுதியின் வாசலில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

காரில் வேகமாக வந்த 29 வயதான நபர் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியதோடு, நடந்து சென்ற ஆறு பேர் மீதும் இடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து காரில் இருந்த நபரை அங்கிருந்தவர்கள் பொலிசார் வரும் வரை பிடித்து கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் சிரியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவுவிடுதியின் உள்ளே அல்லது வெளியே நடந்த சண்டை காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உள்ளார், அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்