நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
269Shares
269Shares
lankasrimarket.com

ஐரோப்பா முழுமையும் செயல்படும் கிறிஸ்துமஸ் சந்தைகள் மீது தாக்குதல் தொடுக்கும் பொருட்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரசாளர்களுக்கு அந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் ஆங்கிலம், ஜேர்மன், மற்றும் பிரெஞ்சு மொழிகளில் போஸ்டர்களை ஐரோப்பா முழுவதும் பரப்பி வருகின்றனர்.

மட்டுமின்றி ஐரோப்பாவின் முக்கிய தலங்களை குறிப்பிட்டு எச்சரிக்கையும் செய்துள்ளனர், இதனிடையே ஜேர்மனியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதி மக்களை பாதுகாப்பு கருத்து வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Potsdam சந்தையில் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட விசேட அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளதாகவும், இருப்பினும் தொடர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்