ஜேர்மனியில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் உள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயை முழுவதுமாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

பெர்லினில் உள்ள பிஹிஸ்டொர்ப் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் தான் தீவிபத்து நேற்றிரவு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இதில் கட்டிடத்தின் உள்ளே இருந்த 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மொத்தமாக 20 பேர் கட்டிடத்தின் உள்ளேயிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வேறு யாரும் உள்ளே இல்லை என தாங்கள் நம்புவதாக தீயணைப்பு துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகள் அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்