சொந்த நாட்டுக்கு திரும்பினால் சிறப்பு சலுகைகள் தரப்படும்: அகதிகளுக்கு அறிவித்த ஜேர்மனி

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நிரந்தர புகலிடம் மறுக்கப்படும் அகதிகள் தன்னார்வத்தோடு தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினால் €3000 வரை குடும்பத்துக்கு பணம் தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜேர்மனியின் உள்துறை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Your Country, Your Future, Now என்ற பெயரில் புதிதாக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்தாண்டு பிப்ரவரி 28-ஆம் திகதிக்குள் தன்னார்வத்தோடு சொந்த நாட்டுக்கு திரும்புகிறவர்களுக்கு €3000 வரை தகுதிவாரியாக உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நிரந்தர புகலிடம் குறித்த சோதனை நடைபெறுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு தற்போது €1200 தரப்பட்டு வரும் நிலையில், சோதனையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு €800 வழங்கப்படுகிறது.

இதோடு மேலும் சில சலுகைகளும் தரப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி கூறுகையில், தன்னார்வமாக ஜேர்மனியை விட்டு வெளியேறுபவர்களுக்கு இலவச முதலுதவியும், சொந்த நாட்டில் முதல் 12 மாதங்களுக்கான வீட்டு உதவிகளும் செய்து தரப்படும் என கூறியுள்ளார்.

கடந்தாண்டை ஒப்பிடும் போது தஞ்சம் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்