ஜேர்மனியில் பயங்கரம்..இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் காயம்

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியின் Duesseldorf அருகே 150 பயணிகளுடன் சென்ற பயணிகள் இரயிலும், எதிரே வந்த சரக்கு இரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின் காரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் Meerbusch தீயணைப்பு துறை 150 பேர் பயணம் கொண்ட பயணிகள் இரயிலில் 5 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு இரயில்வே துறை 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை, விபத்து ஏற்பட்ட இடத்தை அடைந்துள்ள Meerbusch தீயணைப்பு துறையினர், விபத்து தொடர்பான புகைப்படத்தை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த விபத்தின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பலர் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இன்னும் எத்தனை பயணிகள் உள்ளே உள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்