2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்பட்ட பெயர் எது தெரியுமா?

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் 2017-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Ahrensburg பகுதியை சேர்ந்த Knud Bielefeld என்னும் நபர் சேகரித்துள்ள தகவலின்படி, பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு 'BEN' என்ற பெயரும், பெண் குழந்தைகளுக்கு 'EMMA' என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் BEN என்ற பெயர், இந்த ஆண்டும் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை பொருத்தவரையில் கடந்தாண்டு Mia என்ற பெயர் தான் அதிகம் வைக்கப்பட்டிருந்தது, அதனை முறியடிக்கும் வகையில் 'EMMA' என்ற பெயர் இந்தாண்டு அதிகம் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Leipzig-இல் பெயர் ஆராய்ச்சி மைய இயக்குநராக இருந்து வரும் Jürgen Udolph கூறுகையில், காலக்கட்டங்களுக்கு ஏற்ப இந்த போக்கு மாறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 10 முதல் 20 ஆண்டுகள் தான் குறிப்பிட்ட பெயர்கள் பிரபலமாக இருக்க கூடும் என்றும், அதன்பின் மெதுவாக மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

BEN என்ற பெயர் தற்போது ஜேர்மனியில் பிரபலாகிவரும் நிலையில் EMMA என்னும் பெண் பெயர் 1970-களிலேயே அதிகம் வைக்கப்பட்டுள்ள பெயராக இருந்துள்ளது.

மாறி வரும் பெற்றோர்களின் கல்வி அறிவு, காலநிலைக்கேற்ப தொடர்ந்து இந்த மாற்றம் சுழர்ச்சி முறையில் இருந்து வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் BEN என்ற பெயரும் காலத்திற்கேற்ப விரைவில் மறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்