ஜேர்மனியின் புதுவருட கொண்டாட்டத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி, பலர் படுகாயம்

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் புது வருட கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Brandenburg மாகாணாத்தில் 35-வயது நபர் மற்றும் 19-வயது இளைஞர் என இரண்டு நபர்கள் பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட விபத்தினால் பலியாகியுள்ளனர்.

இருவரின் முகத்திலும் வெடிப்பொருட்கள் தாக்கியதால் அவர்கள் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற வெடி விபத்தில் படுகாயமடைந்த 5 நபர்களின் விரல்கள் அகற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் இளைஞர்கள் கூட்டமாக வீசிச்சென்ற பட்டாசுகள் தாக்கியதில் 11-வயது சிறுவன் முகத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுதொடர்பான விசாரணையில் அந்த வெடி பொருட்கள், போலிஷ் எல்லையில் விற்கப்படும் மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பது தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் வருடா வருடம் நடைபெறும் புது வருட கொண்டாட்டங்களின் போது இது போன்ற விபத்துகள் இடம்பெறுவது வழக்கமாகி வருவதால் இதனைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்