பெர்லின் சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்: தேடுதல் வேட்டை தீவிரம்

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியின் பெர்லின் சிறைச்சாலையில் இருந்து தப்பித்த கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புது வருடத்தின் முதல் நாளன்று பெர்லின் Plötzensee சிறையின் முகப்பில் உள்ள காற்றுப்போக்கி வழியே துளையிட்டு இரண்டு கைதிகள் தப்பினர்.

தப்பித்த 44 மற்றும் 21 வயதான இரண்டு கைதிகளில் ஒருவர் அன்று மாலையே சிறைக்கு திரும்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் கடந்த டிசம்பர் 28-ஆம் திகதி 27 முதல் 38 வயது வரையிலான 4 கைதிகள் தப்பித்துள்ளனர்.

சிறையின் வாகன பழுது பார்க்கும் பிரிவில் பணிபுரிந்து வந்த 4 கைதிகளுக்கும் கோடாரி மற்றும் சுத்தியல் வழங்கப்பட்டிருந்தது.

திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர்கள் சுத்தியல் உதவியுடன் வெண்டிலேட்டர் வழியை உடைத்து தப்பித்துள்ளனர்.

அவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு கைதி தப்பித்துள்ளதால் பொலிசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆறு கைதிகள் வெளியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்