ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வயதுச்சோதனை?

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் தஞ்சம் கோரும் இளவயது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவர்கள் வயதை உறுதிச்செய்யும் சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஜேர்மனியில் அதிகளவான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ள நிலையில், தாக்குதல்களும் அதிகரித்துள்ளதற்கு அகதிகளே காரணம் என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் Kandel இடத்தில் ஆப்கான் அகதி, 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை கொலை செய்தான்.

கடந்தாண்டும் இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் ஈரான் அகதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் தன்னுடைய வயதை குறைத்து கூறி ஜேர்மனியில் தஞ்சம் கோரியது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து புகலிடம் கோரும் இளவயது கோரிக்கையாளர்களின் வயதை அறிய சோதனை கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இச்சோதனைகளில் எலும்பு வளர்ச்சியை அறிவதற்காக கை மணிக்கட்டில் எடுக்கப்படும் X-ray அல்லது பற்களை அளவிடுதல் ஆகிய சோதனைகள் அடங்கும்.

இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜேர்மன் மருத்துவ கழகம், இச்சோதனைகள் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு எதிரானவை மற்றும் நம்பத்தகுந்தவை அல்ல என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மனிய மருத்துவக் கழகத்தின் தலைவரான Frank Ulrich Montgomery, இச்சோதனையில் தவறுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

இவை கடினமானவை, அதிகம் செலவு பிடிக்கக்கூடியவை மற்றும் உறுதித்தன்மையற்றவை.

ஒவ்வொரு அகதிக்கும் இச்சோதனையை நீங்கள் செய்வீர்களென்றால், அது அவர்களது நலனுக்கு இடையூறாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்