அலுவலகத்தில் மற்றவர்களின் சம்பளம் எவ்வளவு? இனி தெரிந்து கொள்ளலாம்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
201Shares
201Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் சம்பளம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.

200க்கு மேற்பட்டவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் பணியாளர்கள், ஒரே வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது என்று இந்த சட்டம் கூறுகிறது.

500 பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் இனி இச்சட்டத்தின்படி சம்பள விவரங்களை தவறாமல் வெளியிடவேண்டும்.

Federal Statistical Office இன் புள்ளிவிவரத்தின்படி ஆணுக்கும் பெண்ணுக்குமான சம்பள வேறுபாடு தற்போது 21 சதவீதம் ஆகும்.

முன்னாள் மகளிர் நலத்துறை அமைச்சர் Manuela Schwesig கூறுகையில், தகவல் அறியும் உரிமையின்படி இனி பணியாளர்கள் தங்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஆனால், இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் பணிபுரியும் இடத்தில் தேவையற்ற வெறுப்புணர்வும் உருவாகலாம் என விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்