ஜேர்மனியில் 2012ஆம் ஆண்டு திருநங்கையாக மாறிய ஒருவர் உறை நிலையில் சேமித்து வைத்திருந்த தனது விந்தணுவைத் தனது தற்போதைய துணைவிக்கு வழங்க, அவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
பிறப்பு இறப்பு அலுவலகத்தில் தன்னைக் குழந்தையின் தாய் என பதிவு செய்யுமாறு அந்தத் திருநங்கை விண்ணப்பித்திருந்தார்.
விந்தணுவை வழங்கிய ஒருவரைத் தாய் என ஏற்கமுடியாது என்று அவரது விண்ணப்பத்தை அலுவலகம் ஏற்க மறுத்தது.
இதை எதிர்த்து கீழ் நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு தோல்வியடைய, அவர் ஃபெடரல் நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது முந்தைய பாலினத்தின் அடிப்படையில்தான் அவர் தாயா தந்தையா என்பதை முடிவுச் செய்ய முடியும் என்ற சட்டத்தின்படி, கீழ் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு சரியானதே, அதில் திருநங்கையின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படவில்லை என்று கூறி ஃபெடரல் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.