பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பெண்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
222Shares
222Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் 55 வயது பெண்மணி ஒருவரை கொடூரமான பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் திருமணமான தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்மணியின் உடலை வழிபோக்கர் உதவியால் குப்பை கிடங்கில் இருந்து கைப்பற்றிய பொலிசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெர்லினில் குடியிருக்கும் Marianne(55) என்பவர் பாலியல் விளையாட்டு தொடர்பான இணையதளம் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட Taifun(36) மற்றும் அவரது காதலி ஜாஸ்மின் (27) ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து நட்பாக பழகிய மூவரும் வாடகை குடியிருப்பு ஒன்றில் ரகசியமாக பாலியல் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த தம்பதி இருவரும் மரியன்னெவிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். இவை அனைத்தும் பாலியல் விளையாட்டின் ஒருபகுதியாகவே கருதபட்டும் வந்துள்ளது.

பல மாதங்கள் நீடித்த இந்த ரகசிய பாலியல் விளையாட்டில், ஒரு கட்டத்தில் சித்திரவதை கொடூரத்தால் மரியன்னெ உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உடலை மறைவு செய்ய திட்டமிட்ட இருவரும், சாம்பல் நிற போர்வையில் சுற்றி குடியிருப்பின் அருகாமையில் உள்ள குப்பை கிடங்கில் மறைவு செய்துள்ளனர்.

அடுத்த நாள் வழிபோக்கர் ஒருவரால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜாஸ்மின் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் சிக்கினர்.

மரியன்னெ கொலைக்கு பின்னர் இருவரும் துருக்கி செல்ல திட்டமிட்டு விமான நிலையம் சென்ற நிலையில் உஷார் படுத்தப்பட்ட பொலிசார் விமான நிலையம் சென்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிகூடியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்