2018 Golden Globe விருதுகள்: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் இதுதான்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

2018ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான Golden Globe விருது ஜேர்மனியின் In the Fade திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

‘In the Fade’ தற்கால ஜேர்மனியில் நடக்கும் துயரங்களையும் வன்முறையையும் காட்டும் ஒரு திரைப்படம்.

அன்பான கணவன் அழகான குழந்தை என வாழும் Katja Sekerciயின் வாழ்வில் ஒரு எதிர்பாராத துயரம். அவளது கணவனும் குழந்தையும் ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறார்கள்.

தனது கணவன் மற்றும் குழந்தையின் சாவுக்கு யார் காரணம், ஏன் கொலை செய்தார்கள்? கேள்விகளுக்கான பதில்கள் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

த்ரில்லர் திரைப்படமான In the Fadeன் கதை இதுதான், இப்படத்தை இயக்கியவர் புகழ் பெற்ற இயக்குனர் Fatih Akin.

இதர விருதுகளாக சிறந்த திரைப்படத்திற்கான விருது Three Billboards Outside Ebbing, Missouri என்ற படத்திற்கு drama பிரிவிலும் Lady Bird என்ற படத்திற்கு musical அல்லது comedy பிரிவிலும் கிடைத்துள்ளன.

சிறந்த இயக்குனர் விருது Guillermo del Toroவிற்கு The Shape of Water படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான விருது drama பிரிவில் Gary Oldmanக்கு Darkest Hour படத்திற்காகவும சிறந்த நடிகைக்கான விருது drama பிரிவில் Frances McDormandக்கு Three Billboards Outside Ebbing, Missouri படத்திற்காகவும்

musical அல்லது comedy பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது James Franco வுக்கும் சிறந்த நடிகைக்கான விருது Saoirse Ronanக்கும் கிடைத்துள்ளன.

சிறந்த animated திரைப்படத்திற்கான விருது Cocco படத்திற்கு கிடைத்துள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக Golden Globe விருது விழாவில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகைகள் அனைவரும் கருப்பு நிற உடை உடுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்