ஜேர்மனி இராணுவத்தில் அதிகளவில் இணைந்த இளம் வயதினர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மன் நாட்டின் ஆயுதப்படையில் இளம் வயது ஆண்களும், பெண்களும் இணைந்துள்ளதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல் அடிப்படையில் இராணுவத்தில் 2,128 பேர் சட்டவயது பூர்த்தியாகாமல் இருக்கும் குறைந்த வயதுடையோர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ல், 689 பேர் என இருந்த இந்த எண்ணிக்கை, 2016 ஆம் ஆண்டில் 1,907 குறைந்த வயதுடைய போர் வீரர்கள் இருந்தனர், ஆனால் இப்பொழுது இதைவிட மும்மடங்கு அதிகமான இளைஞர்கள் ஆயுதப்படைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர்.

2011 ல் குறைந்த வயதிற்குட்பட்ட 57 பெண் வீரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது அதைவிட 8 மடங்கு அதிகமாக 448 இளம் பெண்கள் ராணுவத்தில் உள்ளனர் .

கடந்த ஆண்டு ஆறு மாத கால ராணுவபயிற்சிக்கு பின்னரும், டஜன் கணக்கான துருப்புக்கள் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது. ஜேர்மனியில் 18 வயதில் ஒரு நபர் சட்ட வயதுடைவராகிறார்.

ஜேர்மனியில் 17 வயதானவர்கள் ராணுவத்தில் சேர பெற்றோர் அனுமதியுடன் அனுமதிக்கின்றனர், ஆயினும் பயிற்சிக்கு போது ஆயுதங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச நடவடிக்கைகளில் பங்கு பெற அனுப்பப்படவில்லை.

NGO Child Soldiers International-படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மக்களை இராணுவத்தில் சேர்ப்பது மட்டுமே வழக்கமாகும். ஆனால் ஜேர்மனி இந்த சர்வதேச சட்டத்தின் விதிவிலக்காக 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ராணுவத்தில் சேர அணுமதிக்கபடுகின்றனர்.

2014 ஆம் ஆண்டில், குழந்தைகள் உரிமைகள் பற்றிய ஐ.நா. குழு ஜேர்மனிக்கு அதன் ராணுவ ஆட்சேர்ப்பு வயதை உயர்த்த வேண்டும் என்றுதெரிவித்தது.

ஜேர்மனியின் 17 வயதுடைய இளைஞர்களுக்கு கடுமையான மேற்பார்வையின் கீழ் மட்டுமே, ஆயுதங்கள் பயிற்சி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சியை சேர்ந்த எவ்ரிம் சொம்மர் கூறுகையில், பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லீயன், ராணுவத்தில் குறைந்த வயது இளைஞர்களை சேர்த்து பயிற்ச்சியளிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜேர்மனி தன் இராணுவ நோக்கங்களுக்காக இளைஞர்களை நியமிக்கும் போது, அதை யாரும் விமர்சிக்க முடியாது என்றும் சோமர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் ஆயுதப் படைகளில் ஆட்பற்றாக்குறை மற்றும் காலாவதியான ஆயுதங்களை கொண்டிருப்பதாக Spiegel Online தெரிவிக்கிறது, பாதுகாப்பு அமைச்சகம் மில்லியன் கணக்கான யூரோக்களை பயன்படுத்தி புதிய பணியாளர்களை ஈர்ப்பதற்காக செலவு செய்து வருகிறது.

ஜேர்மனியில் கட்டாய இராணுவ சேவையானது, 2011 ல் ஆண் குடிமக்களுக்கு முடிவடைந்தது. கடந்த ஆண்டு கட்டாய இராணுவம் முறை மீண்டும் செயல்பட்டபோது, ​​ஆண்கள் ஆறு மாதங்களுக்கு இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் அல்லது பொதுசேவை அல்லது கௌரவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்