மருத்துவப் பயன்பாட்டிற்கான கஞ்சாவின் தேவை அதிகரிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

மருத்துவப் பயன்பாட்டிற்காக மரிஜுவானா என்று அழைக்கப்படும் கஞ்சாவின் தேவை ஜேர்மனியில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வலி நிவாரணியாகப் பயன்படும் கஞ்சாவுக்கான மருந்துச் சீட்டுகளின் எண்ணிக்கையும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து Reimbursement பெறுபவர்களின் எண்ணிக்கையும் ஜேர்மனியில் அதிகரித்துள்ளதாக ஊடகம் ஒன்று கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவப் பயன்பாட்டிற்கான கஞ்சாவை ஜேர்மனி அரசு சட்டப்பூர்வமாக்கி 10 மாதங்கள் ஆன நிலையில் சுமார் 13,000 நோயாளிகள் அதற்காக விண்ணப்பித்திருப்பதாக Rheinische Post (RP) தெரிவிக்கிறது.

Allgemeine Ortskrankenkasse (AOK), Barmer மற்றும் Techniker Krankenkasse (TK) என்னும் மூன்று காப்பீட்டு நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகளில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

நீண்ட காலமாக வலியால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மருந்தாக கஞ்சா பயன்படுத்தப்படுகிறது, சாதாரண வலிக்கு இது அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த மார்ச் மாதம் கஞ்சா உபயோகம் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்குமுன் ஜேர்மனியில் 1000 பேருக்கு மட்டுமே மருத்துவத் தேவைக்காக கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, ஆண்டுக்கு 700 பேருக்கு அது தேவைப்படலாம் என்று சட்ட மசோதா இயற்றப்படுவதற்குமுன் கணக்கிடப்பட்டது.

சட்டம் இயற்றப்படும் நேரத்தில் “மருத்துவர்களும் நோயாளிகளும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்தப்போகிறார்கள் என்று கணக்கிட இயலாத நிலைமை காணப்பட்டது” என்று ஏப்ரல் 2016இல் சட்ட மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

ஃபெடரல் அரசின் Drug Commissionerஆன Marlene Mortler, கடந்த ஆண்டு மருத்துவப் பயன்பாட்டிற்கான கஞ்சா உபயோகம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது எவ்வளவு அவசியமானது என்பதை அங்கீகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையிலிருந்து அறிய முடிகிறது என்று தெரிவித்தார். "ஆனால், கஞ்சா ஒரு ஒரு சர்வதேச நிவாரணி அல்ல” என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்