ப்ளேபாய் பத்திரிக்கையின் ஜேர்மனி பதிப்பின் அட்டைப்படத்தில் முதல் முறையாக திருநங்கையின் மேலாடை இல்லாத புகைப்படம் வெளிடப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிக்கை ஜேர்மனியை சேர்ந்த குயூலியனா பர்பலா (21) என்ற திருநங்கையின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது.
பிரபல மொடலாக திகழும் பர்பலா பல்வேறு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
16 வயது இருக்கும் போது அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறினார்.
பத்திரிக்கையில் தனது புகைப்படம் வந்தது பெருமையாக உள்ளது என பர்பலா கூறியுள்ளார்.
ப்ளே பாய் பத்திரிக்கை எடிட்டர் ப்ளோரியன் கூறுகையில், சுய உரிமைக்காக எப்படி போராட வேண்டும் என்பதற்கு பர்பலா சிறந்த உதாரணம் என கூறியுள்ளார்.
குறித்த பத்திரிக்கையின் விற்பனை கடந்த வியாழன் முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ப்ளே பாய் பத்திரிக்கையின் அமெரிக்க பதிப்பில் திருநங்கை ஒருவரின் புகைப்படம் கடந்தாண்டு நடுப்பக்கத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.