ஜேர்மனியில் இனி கஞ்சா பயன்படுத்த தடையில்லை? பொலிஸ் அதிகாரிகள் ஆலோசனை

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இனியும் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்க கூடாதென பொலிஸ் அதிகாரிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனியில் நேற்று(5/2/2018) நடைபெற்ற பொலிஸ் அதிகாரிகள் அமைப்பின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து BDK அமைப்பின் தலைவர் Andre Schulz கூறுகையில், மரிஜுனா பயன்படுத்த தடை விதித்தால் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மனிதகுல வரலாற்றில் போதைபொருள் பயன்படுத்தாமல் ஒரு சமுதாயம் இருந்ததில்லை. இது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. என் கணிப்பு ஜேர்மனியில் நீண்ட காலமாக கஞ்சா தடை செய்யப்படாது.

மேலும் மரிஜுனா வகை கஞ்சாவை மருத்துவர்களே பரிந்துரைப்பதால், அமெரிக்கா போன்ற நாடுகளின் குற்றச் செயல்கள் 12.5 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கருத்தை ஏற்று ஜேர்மனி அரசு விரைவில் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்