ஜேர்மனியில் கிறிஸ்துவ பாதிரியாருக்கு சிறை தண்டனை: நீதிமன்றம் நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முன்னாள் கிறிஸ்துவ பாதிரியாருக்கு சிறை தண்டனை விதித்து பவேரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறை தண்டனைக்கு முன்னர் சில ஆண்டுகள் உளவியல் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் 53 வயதான குறித்த பாதிரியாரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமூகத்தில் அவரால் இனி அச்சுறுத்தல் ஏற்படாது என உறுதியான பின்னரே அவரை விடுதலை செய்வது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொடர்பான 100-கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது தொடரப்பட்ட நிலையில் 108 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

குறித்த பாதிரியார் மீதான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் அவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பவேரிய நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பாலியல் குற்றம் தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் இவர்.

இதனையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு தொடங்கி இவர் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி 18 வயது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், சிறுவர் தொடர்பான பாலியல் ஆபாச காட்சிகளை தொகுப்பாக வைத்திருந்ததாகவும் இவர் மீது வழக்குகள் உள்ளது.

இவர் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் போலந்து நாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்