தாக்குதலை நிறுத்துங்கள்: சிரியாவுக்கு ஜேர்மன் சான்சலரின் வேண்டுகோள்

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசுக்கு ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கெளட்டா பகுதியை கைப்பற்றும் விதமாக அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மற்றும் அரசுப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் மொத்த பலி எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.

சிரியா அமைதி ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் உயிருக்கு தான் ஆபத்து என்பதால் உடனடியாக தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்