மூத்த மல்யுத்த பயிற்சியாளர் மரணம்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் மூத்த மல்யுத்த வீரரும், பெர்லின் உயர்நிலை பள்ளியின் மல்யுத்த பயிற்சியாளருமான கோச் ஜிம் டே (64) மரணமடைந்துள்ளார்.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்துள்ளது.

நாட்டில் பல மல்யுத்த வீரர்களை உருவாக்கிய பெருமை ஜிம் டேவுக்கு உண்டு.

பெர்லின் உயர்நிலை பள்ளி மல்யுத்த திட்டத்தித்துக்காக ஜிம் தனது இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து உழைத்துள்ளார்.

ஜிம்மிடம் பயிற்சி பெற்ற மல்யுத்த வீரர் ஜாக் வீலீஸ் கூறுகையில், இன்று நான் இருக்கும் நிலைக்கு ஜிம் எனக்கு அளித்த பயிற்சி தான் காரணம்.

மல்யுத்தம் மட்டுமின்றி ஒழுக்கத்தையும் அவர் எனக்கு கற்று கொடுத்துள்ளார். அவரிடம் மல்யுத்தம் கற்று கொள்ள விரும்புகிறவர்களின் முழு திறமையையும் ஜிம் வெளிகொண்டு வருவது அவரின் சிறப்பாகும்.

ஜிம் டேவின் இறப்பை ஏற்று கொள்வது கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.

Credit: Berlin High School

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்