மனைவியை கொன்று பேஸ்புக் நேரலை செய்த கணவன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் வசித்து வரும் சிரியா அகதி ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டு மற்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Mühlacker நகரில் வசித்து வரும் சிரியா அகதியான, அபு மர்வான் என்பவரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

41 வயதான அபுவுக்கும் அவரது மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவரும் தனித்தனியே வசிக்கத் தொடங்கியதால் மூன்று குழந்தைகளும் தந்தை அபுவிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தன் மனைவி வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்ற அபு, மாலை 4.30 மணியளவில் மனைவி கழுத்தில் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தன் ஒரு மகனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

மட்டுமின்றி, கொலை செய்த சிறு நிமிடங்களில் தன் ஃபேஸ்புக் நேரலையில் “என் மனைவியை கொலை செய்துவிட்டேன். இவளைப் போல் கணவனை கொடுமை படுத்தும் மற்ற பெண்களுக்கு இது ஓர் எச்சரிக்கை” என கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த பொலிசார், தப்பியோடிய அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாம் இருவரும் நடந்தவற்றை மறந்து மீண்டும் குடும்பமாக இருக்கலாம் என குறித்த நபர் அடிக்கடி தன் மனைவியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்