உறைந்த தண்ணீரில் விழுந்த நால்வர்: ஜேர்மனியில் சம்பவம்

Report Print Athavan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உறைந்த தண்ணீரில் விழுந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

ஜேர்மனியின் புகழ்பெற்ற முனிச் English Garden park-ல் உள்ள Kleinhesseloher ஏரி முழுதும் பனியால் உறைந்திருந்தது.

அதன் மீது நடந்து சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பனிக்கட்டி உடைந்ததால் கடும் குளிர் நீரில் விழுந்தனர்.

ஞாயிறன்று இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், உடனடியாக தாயும், அவரது இரண்டு இளம் குழந்தைகளும் தண்ணீரில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தந்தையை மற்றவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளனர், பின்னர் குளிரில் நடுங்கிய அவர்கள் முதலுதவிக்காக உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பரிசோதனைக்கு பின்னர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனை தொடர்ந்து மக்கள் கவனமுடன் இருக்கும்படி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்