தேசிய கீதத்தில் தந்தை நாட்டை சொந்த நாடாக்கக் கோரிக்கை: எந்த நாட்டில்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் தேசிய கீதத்தில் தந்தை நாட்டை சொந்த நாடாக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் ஃபெடரல் குடும்ப நல அமைச்சகத்தில் சமத்துவ அமைச்சராக உள்ள Kristin Rose-Möhring, ஜேர்மனியின் தேசிய கீதத்தில் உள்ள வார்த்தைகளை பாலின சமத்துவம் உள்ளவையாக மாற்றுவதற்கான நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

தந்தை நாடு என்னும் வார்த்தையை சொந்த நாடு என்று மாற்ற வேண்டும் என்றும், சகோதர என்னும் வார்த்தையை வீரம் என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வேளை Kristinஇன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசிய கீதம் மாற்றப்படும் சூழ்நிலை ஏற்படுமென்றால், அவ்வாறு தேசிய கீதம் மாற்றப்படும் முதல் நாடாக ஜேர்மனி இருக்காது. காரணம், ஏற்கனவே ஆஸ்திரியாவும் கனடாவும் தங்கள் தேசிய கீதத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன.

ஆனால் Kristin எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அவர் கோரிக்கை விடுத்த கொஞ்ச நேரத்தில் முகத்தில் அறைந்தாற்போல் Chancellor Angela Merkel, தேசிய கீதம் தனக்கு திருப்தியளிப்பதாக உள்ளது என்று கூறிவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதோடு முடியவில்லை, CDU கட்சியைச் சேர்ந்த Julia Kloeckner, தேசிய கீதத்தை மாற்றுவதைவிட பெண்களுக்கு முக்கியமான வேலைகள் உள்ளன என்று தான் கருதுவதாகக்

கருத்துத் தெரிவித்துள்ளார். அவரையடுத்து CDU கட்சியின் பொதுச்செயலர் Annegret Kramp-Karrenbauer, தான் ஒரு சுதந்திரமான மங்கை என்றும் தேசிய கீதத்தால் தான் தனித்து விடப்பட்டதாகக் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.

பத்திரிகையாளரான Henryk Broder ஒரு படி மேலே போய் கிண்டலாக “இதுதான் நமது நாட்டின் பிரச்சினை என்றால், இதை வெகு எளிதாக தீர்த்துவிடலாமே” என்று கூறிவிட்டு ”இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்