இஸ்ரேலியர்களை அச்சுறுத்திய ஜேர்மன் அரேபிய பாதுகாவலர்கள் வெளியேற்றம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் நடைபெற்ற உலகின் மாபெரும் சுற்றுலா பொருட்காட்சியில் இஸ்ரேல் நாட்டின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பூத்தில் நுழைந்த பாதுகாவலர்கள் சிலர் அங்கிருந்த இஸ்ரேல் நாட்டவர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் மார்ச் 7 முதல் சர்வதேச சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

பொருட்காட்சி தொடங்கிய அன்று இஸ்ரேல் நாட்டின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பூத்தில் நுழைந்த அரேபியர்களான தனியார் பாதுகாவலர்கள் சிலர் அங்கிருந்த இஸ்ரேல் நாட்டவர்களை சூழ்ந்து கொண்டு “பாலஸ்தீனத்தை விடுவி, பாலஸ்தீனத்திற்கு விடுதலை” என்னும் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு திடீரென்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. விரைந்து வந்த பொலிசார் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

அவர்கள் சுற்றுலாப் பொருட்காட்சி அமைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் ஆவார்கள்.

சமீப காலமாக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணி புரியும் இளைஞர்கள் பலர் குற்றச் செயல் புரியும் கும்பல்களுடனும் தீவிரவாத நடவடிக்கைகளை பின்பற்றும் மசூதிகளுடனும் தொடர்பிலிருப்பது பல முறை பெர்லின் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்கிறது.

“ஜேர்மன் அரேபியர்களான இவர்களை இஸ்ரேல் பூத்தில் சென்று கோஷமெழுப்பச் செய்தது எது? யூத எதிர்ப்பாளர்களான இவர்களால் யூதர்களையோ அவர்களுக்கு ஒரு நாடு இருப்பதையோ சகித்துக் கொள்ள முடியாததே இதற்குக் காரணம், இத்தகையவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு எதிர் காலத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு

தடை விதிக்க வேண்டும்” என்று அரசியல்வாதியும் மனித உரிமைகள் ஆர்வலருமான Volker Beck தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்