மாணவியை கற்பழித்து கொன்ற அகதிக்கு ஆயுள் தண்டணை வழங்க கோரிக்கை

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ஆப்கானிஸ்தான் அகதிக்கு ஆயுள் தண்டனை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹுசைன் என்ற அகதி கடந்த 2015-ல் ஜேர்மனிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் மரியா லெடன்பர்கர் (19) என்ற மருத்துவ கல்லூரி மாணவியை ஹுசைன் கற்பழித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து ஹுசைனை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இது குறித்து வழக்கறிஞர் எக்கார்ட் பெர்கர் கூறுகையில், ஹிசைனுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக்கூடாது.

இது பெரிய குற்றம் என்பதால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

ஹூசைன் மீதான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்