ஐஸ் இயக்கத்துக்கு உதவிய மூவரை சிறையில் அடைக்க ஜேர்மனி உத்தரவு

Report Print Athavan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய சிரியாவைச் சார்ந்த ISIS "Sleeper Cells" மூன்று பேரை சிறையில் அடைக்க ஜேர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்லீப்பர் செல்களில் 27 வயதாகும் முகமது என்பவருக்கு 6 1/2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 19 மற்றும் 20 வயதாகும் மேலும் இரண்டு ஸ்லீப்பர் செல்களுக்கு 3 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி ஹேம்பர்க் பிராந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் மூன்றுபேரும் 2015-ம் ஆண்டு சிரியாவில் இருந்து ஜேர்மனி வந்துள்ளனர், பின்னர் இங்கு தாக்குதல் நடத்த சிரியாவில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருந்துள்ளனர்.

சிரியாவில் போர் பதற்றம் அதிகரித்த சமயம் பல்லாயிரக்கனக்கான அகதிகள் துருக்கி மற்றும் கிரிஸ் நாட்டு வழியாக ஜேர்மனிக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

அதே பாதையை இவர்களும் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட், போலி பணம் ஆகியவற்றோடு ஜேர்மனிக்கு வந்தது தெரியவந்துள்ளது.

இவர்களுக்கான உதவியை ISIS இயக்கம் செய்து கொடுத்துள்ளது, இதனை வைத்து 130 பேரை பலிகொண்ட பாரிஸ் தாக்குதலுக்கு உதவி செய்தனர் என ஹேம்பர்க் பிராந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவற்றை எல்லாம் உண்மை என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, இவர்கள் மூவரும் ஜேர்மனியின் வெவ்வேறு மாநில அகதிகள் முகாமிலிருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்