மாயமான தந்தையை 13 ஆண்டுகளாக தேடும் மகன்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மானிய இளைஞர் ஒருவர் மாயமான தமது தந்தையை கடந்த 13 ஆண்டுகளாக தீவிரமாக தேடி வருகிறார்.

குறித்த நபர் கடைசியாக சுவிட்சர்லாந்தில் இருந்து தமது தாயாரை தொடர்பு கொண்டதாக கூறும் இளைஞர், சமூக வலைதளத்திலும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜேர்மனியின் ப்ரெமன் மாகாணத்தில் குடியிருக்கும் 17 வயது Devran என்ற இளைஞரே தமது தந்தையை தீவிரமாக தேடிவருபவர்.

தமக்கு 4 வயது இருக்கும்போது கடைசியாக அவரை பார்த்ததாக கூறும் Devran, அவர் எங்கே மாயமானார், ஏன் மாயமானார் என்பது குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையின் அருகாமை இல்லாது தம்மை மிகவும் பாதித்திருப்பதாக கூறும் Devran, தமது தாயார் வேறொரு திருமணம் செய்து கொண்ட பின்னரும், தனது தேடலுக்கு முழு ஆதரவு அளித்து வருவதாக கூறியுள்ளார்.

அப்துல்லா என மட்டுமே தமது தந்தையின் பெயர் தெரியும் என கூறும் Devran, மிகவும் அருமையான மனிதர் அவர் என்றார்.

துருக்கியின் குர்து மரபை சார்ந்தவர் தனது தந்தை என கூறும் Devran, ஜேர்மனியில் இருந்து அவர் மாயமாவதற்கு சில சட்ட காரணங்கள் இருந்துள்ளது என்பதை தாயார் வழியாக தாம் தெரிந்து கொண்டதாகவும்,

அதே சட்ட சிக்கலே தமது பெற்றோர் பிரிய காரணமாக அமைந்தது எனவும் Devran குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தமது தந்தை வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளதை பேஸ்புக்கில் தமது தாயாருக்கு தெரிவித்திருந்ததாகவும், அதை தமது தாயார் பின்னர் தம்மிடம் தெரிவித்ததாகவும் Devran தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்