Cataloniaவின் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: பார்சிலோனாவில் பதட்டம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

Cataloniaவின் முன்னாள் அதிபர் Carles Puigdemont கைது செய்யப்பட்டதை அடுத்து மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பார்சிலோனாவில் 55,000 பேர் கூடி எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 89 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நான்குபேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ துரோகம் மற்றும் கிளர்ர்சியைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் Puigdemontக்கு எதிராக ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

GETTY IMAGES

இதையடுத்து அவர் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். டென்மார்க்கைக் கடந்து பெல்ஜியத்தித்திற்கு செல்லும் வழியில் அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் ஜேர்மன் நீதிபதி ஒருவரின் முன்பு ஆஜர் படுத்தப்பட இருக்கிறார். பார்சிலோனவிலும், முன்பு Puigdemont மேயராக இருந்த Gironaவிலும் Tarragona மற்றும் Lleidaவிலும் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் Catalan தலைவர்கள் 25 பேர் Puigdemontஐப் போலவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து ஒரு தனிக் குடியரசாக தன்னை Catalonia அறிவித்தது தொடங்கி ஸ்பெயின் Catalon தலைவர்களுக்கெதிராக கைது நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

AFP

AFP

EPA

REUTERS

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்