பசிக்காக அரியவகை ஆட்டை கொன்ற இருவர் கைது

Report Print Athavan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் உள்ள பெட்டிங் மிருகக்காட்சிசாலையில் மக்களின் பார்வைக்காக அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை உண்பதற்காக கொன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெர்லின் நீதிமன்றத்தில் ஆட்டை திருடி கொன்ற குற்றத்தை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். 29 வயதான அந்த இருவரும் ரோமானியர்கள் ஆவர் .

கடந்த பிப்ரவரி 18 ம் தேதி இந்த மிருகக்காட்சிசாலைக்கு வந்த இவர்கள் இருவரும் அங்கு இருந்த அங்கோரா வகை ஆட்டை திருடி வெட்டிக்கொன்றுள்ளனர்.

லில்லி என்று அழைக்கப்படும் அந்த ஆடு மிருகக்காட்சிசாலைக்கு வரும் குடும்பத்தினர் அதிகம் விரும்பி ரசிக்கும் ஆடு ஆகும். மேலும் இந்த ஆட்டிற்கு குழந்தைகள் மத்தியில் ஒரு பிரபலமான ஈர்ப்பு இருந்து வந்துள்ளது.

இவர்கள் ஆட்டை கொல்லும் போது மிருகங்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்யும் போது ஆட்டின் ரத்தம் தோய்ந்த கையுரைகள் மற்றும் கத்தியுடன் அந்த நபர்கள் இருந்துள்ளனர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக அவர்கள் இருவரும் உண்ண உணவு இல்லாமல் இருந்ததால் தான் ஆட்டை கொன்றதாக பொலிஸாரிடம் விசாரனையின் போது கூறினர்.

இவர்கள் இருவரும் மிருகக்காட்சிசாலையை பண்ணை என்று தவறாக நினைத்து இவ்வாறு செய்து விட்டதாகவும் கடந்த ஜனவரியில் கட்டிட வேலைக்காக ஜேர்மனி வந்த இவர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்காததாலும் சரியான உணவின்றி இருந்துள்ளனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆட்டை திருடி கொன்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு 10 மாத சிறைதண்டனையும் மற்றொருவருக்கு 9 மாதம் சிறை சிறைதண்டனையும் பெர்லின் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்