பெர்லின் மராத்தான் போட்டியின்போது அதிர்ச்சி சம்பவம்: துரிதமாக செயல்பட்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற மராத்தான் போட்டியின்போது போட்டியாளர்களை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக துரிதமாக செயல்பட்ட பொலிசார், தாக்குதலை முறியடித்ததுடன், சந்தேக நபர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி, மராத்தான் போட்டியாளர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும்,

கடந்த 2016 ஆம் ஆண்டு பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தை மீது லொறியை மோதவிட்டு 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய Anis Amri-உடன் தமக்கு தொடர்பு உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்காக கூஈர்மையான கத்திகளை தயாரித்து அவர் வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு முயற்சி செய்த குற்றவாளிகளை பெர்லின் பொலிசார் கைது செய்துள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போட்டியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்