இஸ்லாமிய குழந்தைகள் ஸ்கார்ப் அணிவதற்கு தடை: வரவேற்கும் ஆசிரியர் குழுக்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
220Shares
220Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் மேற்கு மாகாணமாகிய North Rhine-Westphalia 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் தலையில் ஸ்கார்ப் அணிவதற்கு தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை இஸ்லாமிய கவுன்சில் விமர்சித்துள்ள நிலையில் ஆசிரியர் குழுக்கள் இது ஒரு நல்ல முடிவு என்று அதை வரவேற்றுள்ளனர்.

ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவரான Heinz-Peter Meidinger, மத அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வம்புக்கிழுத்தல் போன்ற பிரச்சினைகள் இந்த தடையினால் தவிர்க்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ந்த பிள்ளைகளைப் பொருத்தவரையில் வேறு மாதிரியான கருத்துகள் இருக்கலாம், குறைந்தது சிறு பிள்ளைகள் மத்தியிலாவது மத அடிப்படையிலான பாகுபாடு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

North Rhine-Westphaliaவின் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சரான Joachim Stamp இது தொடர்பான initiativeஐ அறிவித்துள்ளார். மத காரணங்களுக்காக சிறு பிள்ளைகளின் தலை மூடச் செய்யக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

ஜேர்மனியின் இஸ்லாமிய கவுன்சில் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. இப்போது யாரையும் கட்டாயப்படுத்தி தலை மூடச் சொல்வதில்லை என்று கூறியுள்ள கவுன்சிலின் தலைவரான Burhan Kesici, இஸ்லாமிய பெண்களின் மத சுதந்திரங்களில் தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்