ஜேர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கள் மதியம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நடப்பட்ட நிலையில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிசார் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்று வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில், பலத்த காற்று காரணமாக கம்பம் சரிந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இந்தாண்டு கம்பம் கீழே விழுந்ததால் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும்.

ஏற்கனவே Rhineland-Palatinate மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் கம்பம் கீழே விழுந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்தான் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

நூற்றாண்டுகளுக்கு மேலாக மே தினத்தன்று வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அன்றைய தினம் மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஜேர்மனியில் நடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்