சைக்கிளில் உலகைச் சுற்றும் ஜேர்மானியர் திடீர் மாயம்: தேடுதல் வேட்டையில் இரு நாடுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

சைக்கிளில் உலகைச் சுற்றும் ஜேர்மானியர் ஒருவர் மெக்ஸிகோவில் திடீரென்று மாயமாகியுள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த Holger Franz Hagenbusch சைக்கிளில் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் மெக்ஸிகோ பகுதியில் வலம் வரும்போது அவருடன் தொடர்பு அறுபட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

11 நாட்களாக அவரிடம் இருந்து எந்த செய்தியும் வராத நிலையில் அவரது சகோதரர் சமூக ஊடகங்களில் இது குறித்து தகவல் வெளியிடத் தொடங்கினார்.

அவருக்கு ஆதரவாக மெக்ஸிகோ பத்திரிகையாளர் ஒருவர் Holger Franz குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுவரையிலும் அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் சமுக ஊடகங்களில் பலர் அவருக்கு உற்சாகமூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

43 வயதான Holger Franz லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் முடித்ததும்ஆப்பிரிக்காவுக்கு செல்வதாக இருந்தது.

“சைக்கிளில் பயணம் செய்வது நேரம் குறித்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில்லை, அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் வரவேற்பையும் பெற்று எனது பயணத்தை அனுபவித்து பயணிக்கிறேன்” என்று Holger Franz ப்ளாக் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்