என் கனவுகள் எல்லாம் உடைந்துவிட்டன! ஜேர்மனி சென்று திரும்பிய 14 வயது பிரித்தானியா சிறுமி

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஜேர்மனியில் எடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் தான் தற்போது நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் எரின் மோரன் ரிங்(14). ஜேர்மனியில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், நான் என்னுடைய சிறு வயதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

எனக்கு நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, விளையாடுவது, நடிப்பது போன்றவைகள் பிடிக்கும். அதன் மீது மிகுந்த ஆர்வத்தில் இருந்த நான் அது தான் என்னுடைய கனவாக வைத்திருந்தேன்.

அந்த நேரத்தில் ஸ்கூலிஸ் என்ற நோயின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளானேன். முதலில் அந்த நோயை பற்றி முழுமையாக தெரியாத காரணத்தினால், கவலைப்படாமல் இருந்தேன்.

அதன் பின்பு தான் தெரிந்தது, என்னுடைய முதுகெலும்பு சாதரணமாக இருப்பதை விட வளைந்துள்ளது என்று, அதன் பின் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள இங்குள்ள தேசிய சுகாதார சேவையை(NHS) அனுகிய போது, இதற்கு இங்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றேன். அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய கனவும் எல்லாம் உடைந்துவிட்டது என்று நினைத்த போது, மீண்டும் நல்ல படியாக நடக்க ஆரம்பித்தேன்.

தற்போது நலமாக உள்ளேன். இன்னும் 12 வாரங்களில் ஜிம்னாஸ்டிக்கிற்கு செல்லவுள்ளேன். அதைத் தொடர்ந்து நடனம், விளையாட்டு என அனைத்திலும் கவனம் செலுத்தவுள்ளேன். முன்பை விட தற்போது என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்