தொடர் மிரட்டல்கள்: மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜினாமா

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் Christina Schulze Föcking பதவி விலகியுள்ளார்.

ஜேர்மன் சான்லரான ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியை சேர்ந்தவர் Christina Schulze Föcking.

தற்போது North Rhine-Westphalia மாகாணத்தின் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ளவர் பதவி விலகியுள்ளார்.

இவரது பன்றி பண்ணையில் உள்ள விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதன் காரணமாக தொடர் மிரட்டல்கள் வந்ததால் பதவி விலகியதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு மட்டுமின்றி, தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், இதற்கு முன்பு இதுபோன்றதொரு தாக்குதல்களை அரசியல் வாழ்வில் பார்த்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு இவரது பண்ணை வீடியோக்கள் வெளியான நிலையில், எதிர்கட்சிகள் பாராளுமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்