ஜேர்மனி அரசு கட்டிடத்தில் தீக்குளித்த ஈரானியர்: சோகப் பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

நேற்று ஈரானைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் ஜேர்மனியின் Göppingen நகரில் அமைந்துள்ள அரசுக் கட்டிடம் ஒன்றில் நுழைந்து தீக்குளித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதாக அரசாங்கம் அனுப்பிய கடிதம் ஒன்றை அங்கிருந்த ஊழியர்களிடம் காட்டி அந்த நபர் உதவி கேட்டார்.

அங்கிருந்த பெண் ஊழியர்கள் கவனிப்பதாகக் கூறியும் அவர் கோபமடைந்ததாகத் தெரிகிறது.

திடீரென்று தன்னுடைய பையிலிருந்து ஏதோ ஒரு திரவம் அடங்கிய பாட்டில் ஒன்றை எடுத்த அவர் அந்த திரவத்தைத் தனது தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஒருவர் மட்டும் துடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டவல்களை எடுத்து தீயை அணைத்தார். தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அந்த அரசு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த அந்த நபர் தீக்குளித்ததாகத் தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்