ஜேர்மனில் கனமழையால் முக்கிய நகரங்களை சூழ்ந்த வெள்ளம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் North Rhine-Westphalia மாநிலத்தில் பெய்த கனமழையால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Wuppertal நகரில் 70 சென்டிமீற்றர் அளவு மழைபெய்துள்ளது. இதன் காரணமாக பல கார்கள் சாக்கடை பகுதிகள் மற்றும் பள்ளங்களில் சிக்கியுள்ளன. இந்த நகரம் முழுவதும் தண்ணீரில் சிக்கியுள்ளது.

Aachen நகரில் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் மின்சார பாதிப்பு ஏற்பட்டு, தற்காலிக மின்சார வசதி ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Wuppertal நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்து, இடியின் காரணமாக மேற்கூரை இடிந்துவிழுந்துள்ளது.

தற்போது, இந்த 4 நகரங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை வானிலை ஆய்வாளர்களால் விடப்பட்டுள்ளது.

மேலும், சமூகவலைதளவாசிகள் வெள்ளம் குறித்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்