வன விலங்குக் காப்பகத்திலிருந்து விலங்குகள் தப்பியதாக கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

நேற்றைய தினம் மேற்கு ஜேர்மனியின் வன விலங்குகள் காப்பகத்திலிருந்து விலங்குகள் தப்பியதாக கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பமாக ஒரு கரடி மட்டுமே தப்பியுள்ளது என்றும் மற்ற விலங்குகள் எதுவும் தப்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் Lünebachஇல் உள்ள Eifel வன விலங்குகள் காப்பகத்திலிருந்து இரண்டு சிங்கங்கள், இரண்டு புலிகள், ஒரு சிறுத்தைப்புலி மற்றும் ஒரு கரடி ஆகிய விலங்குகள் தப்பி விட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அந்த கரடி மட்டும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவை தப்பவில்லை என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. Arzfeldஇன் மேயரான Andreas Kruppert, சிங்கங்கள், புலிகள், மற்றும் சிறுத்தைப்புலி ஆகிய விலங்குகள் தங்கள் கூண்டுகளை விட்டு வெளியேறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவை ஒளிந்திருந்தன என்றும் தப்பிவிட்டதாக தவறான தகவல் வெளியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயலின்போது அவை எங்கே இருக்கின்றன என்பதை அலுவலர்களால் அறிய முடியவில்லை எனவும் பின்னர் மழை குறைந்த பிறகு ட்ரோன்கள் மூலம் தேடியபோது அவற்றைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான செய்தி குறித்து அச்சம் ஏற்பட்ட நிலையில் அந்த நிலை அப்படியே மாறிவிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்