முடிவுக்கு வருகிறதா ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்குமிடையேயான உறவுகள்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கருத்துக்களைப் பார்க்கும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த விசேஷமான உறவுகள் முடிவுக்கு வருவதுபோல் தோன்றுகிறது.

இரண்டாம் உலகப்போர் இரண்டு நாடுகளையும் பிரிப்பதற்கு பதிலாக நெருக்கமாக்கியதை நினைவு கூறுகிறார்கள் ஜேர்மானிய முதியவர்கள்.

கார்பசேவ் காலகட்டம் மற்றும் சோவியத் யூனியனின் முடிவு குறித்து அதிகம் உணர்ச்சிவசப்பட்டவர்கள் ஜேர்மானியர்கள் என்றே கூறலாம்.

இதனால் தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிளவு ஒரு பிரிவினரை கவலையடையச் செய்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை உணர்ந்த முதியவர்கள் இந்த பிரிவு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maasஇன் சமீபத்திய கருத்துகளும் அவரது குரலின் தொனியும் ஜேர்மன் மக்களிடையே இரு வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன.

அவரது கருத்துக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தினரும் அவரது பேச்சிலுள்ள தொனியைக்கூட எதிர்த்து ஒரு கூட்டத்தினரும், முக்கியமாக முதியவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் Heiko Maas ரஷ்யாவின் வெறுப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

தடைகளை பாதி நீக்குவது குறித்த விடயத்தை நிராகரித்துள்ள அவர் சிரிய பிரச்சினையைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்