ஜேர்மனி மக்களுக்கு எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட தகவல்

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் முக்கியப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் Hesse மற்றும் North Rhine-Westphalia பகுதியில் கடந்த வியாழக்கிழமை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததது.

இதனால் வீதிகளில் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடியது.

குறிப்பாக Stuttgart விமானநிலையத்தில் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தரையிரங்கும் விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டன.

இந்நிலையில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பலத்த சத்ததுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதனால் ஒரு சதுர மீற்றருக்கு 25 முதல் 40 லிட்டர் வரை மழையின் அளவு இருக்கலாம் எனவும் அதே சமயம் 60 லிட்டர் வரையும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 75 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் சற்று கவனமுடன் வரும் படி தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்