ஜேர்மனி போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறிய ஏவுகணை: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஜேர்மனி
442Shares
442Shares
lankasrimarket.com

போர்ப்பயிற்சியின்போது ஏவுகணை ஒன்று தவறுதலாக, ஏவப்பட்டு போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

ஜேர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைகள் ஏவப்பட்டன.

அப்போது ஒரு ஏவுகணை சரியாக ஏவப்படாமல் கப்பலிலேயே வெடித்துச் சிதறிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

போர்க்கப்பலிலிருந்து பட்டாசு வெடிப்பதுபோல அந்த ஏவுகணை வெடித்துச் சிதறுகிறது.

ஆர்டிக் பகுதியில் நடைபெற்ற பயிற்சியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தில் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.

கப்பலின் கேப்டனான Thomas Hacken கூறும்போது ஒரு பயங்கரமான நெருப்புச் சுவரின் முன்னால் நாங்கள் நின்று கொண்டிருந்தோம், கப்பலின் தானியங்கி தீயணைப்பு அமைப்பு தண்ணீரை தெளித்ததால் பணியாளர்களால் தீயை அணைக்க முடிந்தது.

அதிர்ச்சியுற்ற இரண்டு வீரர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்றார்.

கப்பலில் உள்ள ஏவுகணை ஏவும் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளதைக் காண முடிகிறது.

ஜேர்மனி கப்பற்படையின் தலைமை ஆய்வாளர் கூறும்போது, இச்சம்பவம் மிகவும் தேவையான ஒரு அபாயம்தான், ஏனென்றால் உண்மை நிகழ்வுகளையே நாம் பயிற்சியாக சந்திக்கிறோம், இதனால் ஆபத்து நேரங்களில் செயல்படுவதற்கு தயாராக இருக்க முடியும் என்றார்.

இரண்டு வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் போர்க்கப்பல்கள் ஜேர்மனியின் Wilhelmshavenஇலுள்ள துறைமுகத்துக்கு திரும்பின.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்