உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய புகலிடக்கோரிக்கையாளர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
224Shares
224Shares
lankasrimarket.com

ஜேர்மனில் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தையை சிரிய நாட்டு புகலிடக்கோரிக்கையாளர் காப்பாற்றியுள்ளார்.

North Rhine-Westphalia இல் அமைந்துள்ள Henne ஆற்றின் குறுக்கே நடந்து சென்ற 3 வயது குழந்தை தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துள்ளான்.

இதனை தனது வீட்டு மாடியில் இருந்து பார்த்த முகமத் என்ற சிரிய நாட்டு புகலிடக்கோரிக்கையாளர் விரைந்து வந்து குழந்தையை மீட்டுள்ளார்.

தண்ணீரை அதிகம் குடித்த காரணத்தால் குழந்தை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் குழந்தையை காப்பாற்றிய முகமத்துக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை காப்பாற்றிய நபருக்கு அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்