ஜேர்மனில் மருந்து விற்பனை ஊழலில் ஈடுபட்ட நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
113Shares
113Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் Bottrop நகரில் Peter S என்ற மருந்து விற்பனையாளர் ஊழலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய மருத்துவ தயாரிப்பு சட்டத்தை மீறி 2012 முதல் 2016 ஆம் காலகட்டத்தில் மட்டும் சுமார் 14,500 மோசடிகளை செய்துள்ளார்.புற்றுநோய்க்கு வழங்கப்படும் மருந்துகளில் செயலற்ற மூலப்பொருட்களை கலந்து விற்பனை செய்துள்ளார். இதனால் 3,700 நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

2012 மற்றும் 2016 க்குள் குறைந்தபட்சம் 14,500 க்கும் குறைவான மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்